யாழில் அதிரடியாக கைது செய்யபப்பட்ட மூவர்! மீட்கப்பட்ட ஆபத்தான பொருட்கள்

11 hours ago

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக நேற்றையதினம் காவல்துறையினரிடம் பிடிப்பட்டுள்ளனர்.

இதன்போது போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசி, ஹெரோயின் உள்ளிட்ட சில பொருட்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காவல்துறை போதைதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் மஞ்சுள கருணாரத்ன தலைமையிலான குழுவினரின் ரோந்து நடவடிக்கைகளின் கைது நடவடிக்கை நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மேலதிக விசாரணை

அதன்போதே, நல்லூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞரும் அரியாலை பகுதியைச் சேர்ந்த முறையே 30 மற்றும் 32 வயதான இரண்டு இளைஞர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் அதிரடியாக கைது செய்யபப்பட்ட மூவர்! மீட்கப்பட்ட ஆபத்தான பொருட்கள் | Three People Arrested For Using Drugs In Jaffna

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!