2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்றுமுதல் ஆரம்பம்!

3 hours ago

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) முதல் ஆரம்பமாகிறது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகப் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 நாட்களுக்கு இடம்பெற்றதன் பின்னர், இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும்.

இதேவேளை, வரவு செலவுத் திட்ட காலப்பகுதியில், அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து, ஒவ்வொரு நாளும் விவாதம் நடைபெறும் என்றும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்தது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (07) மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.