வாராந்த ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறுவதுடன் சில தீங்குகளில் இருந்தும் எம்மைப் பாதுகாக்க முடியும்.
இந்தநிலையில், நவம்பர் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான குறித்த காலப்பகுதியில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.
அந்தவகையில் மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு ஆகிய 5 ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் அதிஷ்டத்தை அள்ளித் தரப் போகின்றது.
மிதுன ராசி
இந்த வாரம் மிதுன ராசியினருக்கு செய்யும் வேலைகளில் இலாபம் உண்டாகுவதுடன் பொன் பொருள் பூமி என்று வாங்கிட முடியும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

முயற்சிகள் வெற்றியாகும், பணப் புழக்கத்தை அதிகரிக்கும், வெளிநாட்டு முயற்சிகளை வெற்றியளிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும், எதிர்பார்ப்பு பூர்த்தியாகும், அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். இழுபறி வேலை முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
சிம்ம ராசி
சிம்ம ராசியினருக்கு வரவு அதிகரிப்பதுடன் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த செயல் நடக்கும், வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த இடமாற்றம் கிடைக்கும். விரய குருவின் பார்வைகளால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
கன்னி ராசி
கன்னி ராசியினருக்கு உழைப்பு அதிகரிக்கும். ராகுவால் செல்வாக்கை உயர்த்துவார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பிரச்சினை போராட்டம் என்ற நிலை மாறும்.

இலாப குருவால் வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். செவ்வாய் பகவான் முயற்சியை வெற்றியாக்குவார். புதிய இடம் வீடு வாங்க நினைத்த கனவு நனவாகும். சுய தொழில் இலாபம் தரும். வியாபாரிகளுக்கு பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.
விருச்சிக ராசி
இந்த வாரம் விருச்சிக ராசியினருக்கு குரு பார்வை முன்னேற்றத்தை உண்டாக்கும். குடும்பத்தில் சுப செயல் நடக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.

உடல்நிலை சீராகும். போட்டி, வழக்கு, எதிர்ப்பு என்ற நிலை மாறும். வருமானம் அதிகரிக்கும். குருவும், சுக்கிரனும் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசியினருக்கு இந்த வாரம் கேதுவும், சூரியனும் இழுபறியாக இருந்த வேலையை முடிப்பர். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். தொழில், முன்னேற்றம் அடையும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

சுக்கிரன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் நலனில் அக்கறை உண்டாகும். புதிய நட்பு ஏற்படும். நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.
சூரியன், சுக்கிரன், ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் நேற்றைய கனவு நனவாகும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் இலாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!











