அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயார்க் நகர மேயர் பதவிக்கான தேர்தல், நேற்று (நவம்பர் 4) நடைபெற்று, அதன் முடிவுகள் அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ஊழல் குற்றச்சாட்டுகளால் மேயராக இருந்த எரிக் ஆடம்ஸ் ராஜினாமா செய்ததையடுத்து நடந்த இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி (வயது 34), குடியரசுக் கட்சி வேட்பாளரான கர்டிஸ் ஸ்லிவாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம், மம்தானி நியூயார்க் நகரின் முதல் முஸ்லீம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார். மம்தானியின் வெற்றியைப் பற்றி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளிப்படையாகக் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், கருத்துக் கணிப்புகளை மெய்ப்பித்து, தலைமுறைகளில் இளம் மேயராக அவர் பதவியேற்க உள்ளார்.
Ramkumar
காலையிலேயே அதிர்ச்சி..!! புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் வெடித்துச் சிதறிய கோர விபத்து – 3 பேர்உயிரிழப்பு, 11 பேர் காயம்- நொறுங்கிய வீடியோ..!!!
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லி சர்வதேச விமான நிலையத்தில் பயங்கர விபத்து ஒன்று நடந்துள்ளது. எரிபொருளுடன் புறப்பட்ட (Take-off) யுபிஎஸ் கார்கோ விமானம் (UPS Cargo Plane), வானில் ஏறிய சில நிமிடங்களிலேயே திடீரெனத் தீப்பிடித்தது. அதன்பின்னர், விமான நிலையத்தின்…
போதைப் பொருளால் வீழ்ந்த மாமனிதன்…. இனி நீ வேண்டாம்… பிரபல கிரிக்கெட் வீரரை தூக்கியெறிந்த அணி…!!
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் மூத்த மற்றும் முக்கிய வீரரான, 20 வருடங்களுக்கும் மேலாக விளையாடி 8,000-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த பன்முக திறமையாளர் சியான் வில்லியம்ஸ் (Sean Williams), சமீபத்தில் 2025 ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆப்பிரிக்க தகுதிச் சுற்றிற்கு…











