பூமிக்கு மிக அருகில் வரவுள்ளதால் நிலவு இன்று வழக்கத்தை விட 30 சதவீதம் பெரிதாகத் தென்படும் என நாசா அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், இன்று மாலை 6:30 மணியிலிருந்து சூப்பர் மூன் நிகழ்வைக் காண முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
நிலவு தனது அதிகபட்ச பிரகாசத்தினை மாலை 6:49 மணியளவில் அடையும் என்றும் இதனைப் பார்ப்பதற்கு டெலஸ்கோப் போன்ற உபகரணங்கள் தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.











