யாழில் பேருந்து தரிப்பிடத்தில் மீட்கப்பட்ட சடலம்

1 day ago

யாழில் பேருந்து நிலையத்தில் இருந்து முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உடுவில் பொது நூலகத்துக்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மாவை கலட்டி, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை என்ற முகவரியைச் சேர்ந்த சின்னன் தங்கராசா (வயது 74) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாசகம் 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் அப்பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக யாசகம் பெற்று வந்துள்ளார்.

யாழில் பேருந்து தரிப்பிடத்தில் மீட்கப்பட்ட சடலம் | Body Of 74 Year Old Man Recovered In Uduvil

இந்தநிலையில், நிலையில் நேற்று முன் தினம் (06) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரண விசாரணை

சடலத்தை மீட்ட சுன்னாகம் காவல்துறையினர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

யாழில் பேருந்து தரிப்பிடத்தில் மீட்கப்பட்ட சடலம் | Body Of 74 Year Old Man Recovered In Uduvil

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!