பொதுவாக, அவசரத் தேவைகளுக்குப் பயன்படும் மற்றும் எளிதாகக் காணாமல் போகும் பொருட்களில் பாதுகாப்பு ஊசிக்கு முக்கிய இடமுண்டு. ஆனால், அந்தப் பாதுகாப்பு ஊசி ஒன்று சுமார் ரூ. 68,700 என்ற விலைக்கு விற்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? இந்த விலையைக் கேட்டாலே, நாம் அணியும் ஆடையைவிட, இந்த ஊசியைத்தான் பத்திரமாகப் பாதுகாப்போம் என்பதில் சந்தேகமில்லை. பிரபல ஆடம்பர ஃபேஷன் நிறுவனமான ‘பிராடா’, சாதாரண பாதுகாப்பு ஊசியை, யாரும் எதிர்பாராத வகையில் 775 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 68,700) என்ற அதிர வைக்கும் விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
இந்தத் தொகையானது, பல இளைஞர்களின் ஒரு மாத வருமானத்தைவிட அதிகம் என்பதால், சாதாரணப் பயன்பாட்டுப் பொருளுக்கு இவ்வளவு விலையா என்று பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். பொதுவாக, ரூ. 10 முதல் ரூ. 20 வரை விற்கப்படும் இந்தப் பொருளை ஆடம்பர பிராண்ட் விற்பனைக்குக் கொண்டு வரும்போது, அதன் விலையும் பலமடங்கு உயர்ந்து, ஒரு பெரிய தொகையுடன் வருவது இயல்பாக உள்ளது.
‘பிராடா’ நிறுவனம் இந்தத் தங்கப் பாதுகாப்பு ஊசியை “நேர்த்தியான உலோகப் பாதுகாப்பு ஊசி ப்ரூச்” என்ற பெயரில் விற்பனை செய்கிறது. இதில் லேசான நீலம், இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு ஆகிய மூன்று வண்ணங்களில் ‘க்ரோசெட்’ வேலைப்பாடுகளுடன், நிறுவனத்தின் சின்னமான முக்கோண லோகோ தொங்கவிடப்பட்டு, சாதாரண ஊசியின் அழகு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த விலையுயர்ந்த பொருளை ஒருசேர பணம் செலுத்த விரும்பாதவர்களுக்காக மாதத் தவணைத் திட்டமும் பிராடா நிறுவனம் வழங்குகிறது.
இந்தக் பாதுகாப்பு ஊசியின் விலை சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளான நிலையில், இணையவாசிகள் பலர் அதிர்ச்சியையும், நகைச்சுவையுடனும் பலதரப்பட்ட கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு பயனர், “ஆடம்பரம் என்பது பணத்தைக் கையாளும் ஒரு தந்திரமே” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “இது ‘க்ரோசெட்’ வேலைப்பாடு கொண்ட பாதுகாப்பு ஊசி, ஒருவேளை ஒரு நாளைக்கு 2 டாலர் சம்பாதிக்கும் யாரோ ஒருவரால் செய்யப்பட்டிருக்கலாம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
Muthu Kumar
ஐயோ..! என் கையில முள் குத்திடுச்சு…. மருத்துவராக மாறிய குட்டி குரங்கு…. வைரலாகும் க்யூட் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் ஒரு தனித்துவமான காணொளி வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண் குரங்குகளை வைத்துச் செய்த சமூக சோதனை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்பெண் தன் ஆடையிலிருந்த முட்கள் போன்ற விதைகளை அகற்ற குரங்கிடம் உதவி கேட்கும் காட்சி பதிவாகியுள்ளது.…
“இதுதாங்க உண்மையான ஸ்டண்ட்!”… டாம் குரூஸின் விமான ஸ்டண்டை செய்து காட்டிய யூட்யூபர்… வைரலாகும் திகைப்பூட்டும் வீடியோ…!!!!
அமெரிக்க யூடியூபர் மிச்செல் காரே, டாம் க்ரூஸின் ‘மிஷன் இம்பாசிபிள் – ரோக் நேஷன்’ படத்தில் இடம்பெற்ற உலகப் பிரபலமான விமான ஸ்டண்ட்டை துணிச்சலுடன் மீண்டும் செய்து, அதன் வீடியோவை யூடியூபில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார். 2015இல் வெளியான இந்தப் படத்தில், சி-130…









