அமெரிக்க யூடியூபர் மிச்செல் காரே, டாம் க்ரூஸின் ‘மிஷன் இம்பாசிபிள் – ரோக் நேஷன்’ படத்தில் இடம்பெற்ற உலகப் பிரபலமான விமான ஸ்டண்ட்டை துணிச்சலுடன் மீண்டும் செய்து, அதன் வீடியோவை யூடியூபில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார். 2015இல் வெளியான இந்தப் படத்தில், சி-130 ராணுவ விமானம் டேக்ஆஃப் ஆகும் போது அதன் பக்கவாட்டில் தொங்கியிருந்த க்ரூஸின் அபாயகரமான காட்சி ஹாலிவுட்டின் மிகவும் பேசப்பட்ட ஸ்டண்ட்டுகளில் ஒன்று.
அதேபோல், காரேயும் சுமார் 150 மைல் வேகத்தில் பறக்கும் சி-130 விமானத்தின் வெளிப்புறத்தில் பாதுகாப்பு கயிறுகளுடன் தொங்கினார். க்ரூஸ் அசல் ஸ்டண்ட்டை பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி செய்திருந்தாலும், காரேயின் வீடியோவில் பாதுகாப்பு இருந்தாலும் ஸ்டண்ட்டின் ஆபத்தும், உழைப்பும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
வாரக்கணக்கில் தீவிர பயிற்சி மேற்கொண்ட காரே, காற்றுத் தூணிகளில் பயிற்சி செய்து, கழுத்து மற்றும் மேல் உடல் தசைகளை வலுப்படுத்தி, தொழில்முறை ஸ்டண்ட் பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலுடன் தயாரானார். “டாம் க்ரூஸுடன் ஸ்டண்ட் செய்ய விரும்பினால், அவரது மிகப் பெரிய ஸ்டண்ட்டுகளில் ஒன்றை நான் செய்து நிரூபிக்க வேண்டும்” என தனது வீடியோவில் அவர் கூறினார்.
கடினமான உடல் சவால்களை ஏற்றுக்கொள்வதில் பிரபலமான காரே, இந்த வீடியோ மூலம் ஹாலிவுட் ஆக்ஷன் காட்சிகளின் பின்னால் உள்ள ஒழுக்கம், தயாரிப்பு ஆகியவற்றை பார்வையாளர்களுக்கு உண்மையாக உணர்த்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, ஏராளமான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
Babblumagesh30
“சுய தொழில் கோடீஸ்வரர்கள்!”… சொந்த முயற்சியால் 22 வயதில் தொழிலதிபர்கள் ஆன இந்திய வம்சாவளி இளைஞர்கள்… வெற்றியின் ரகசியம் இதுதானா?
அமெரிக்காவின் கலிபோர்னியா சான் ஜோசேவில் உள்ள பெல்லர்மைன் காலேஜ் பிரிபாரேட்டரி பள்ளியில் படித்த 22 வயது இளைஞர்கள் சூர்யா மிதா, ஆதர்ஷ் ஹைரேமத் ஆகிய இந்திய வம்சாவளி நண்பர்களுடன் அமெரிக்கர் பிரெண்டன் பூடி ஆகியோர், சிறு வயதிலிருந்தே தொழில் தொடங்கி கோடீஸ்வரர்களாகும்…
அடக்கு முறையால் கொடுமைப்படுத்தப்பட்ட 25 வயது பெண்… சண்டையில் உயிரிழந்த கணவரால் மரண தண்டனை… நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு..!!!!
கோலி கௌஹ்கான் என்ற 25 வயது இளம்பெண், 12 வயதில் உறவினருக்குத் திருமணமாகி, 13 வயதில் குழந்தை பெற்றெடுத்தார். பாலோச் சமூகத்தைச் சேர்ந்த இவர், ஈரானின் மிகவும் ஒதுக்கப்பட்ட சிறுபான்மையினரில் ஒருவர். திருமணமான கணவர் பல ஆண்டுகளாக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும்…









