ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

1 week ago

ஸ்பெயினின் வலென்சியாவில் கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலாமாண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கடந்தாண்டு அக்டோபர் 29ம் தேதி வலென்சியா மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 240க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

வெள்ளம் ஏற்பட்டு, பல கட்டடங்கள் மூழ்கிய பிறகே மாகாண அரசு எச்சரிக்கை விடுத்ததாக அதிருப்தி குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் முதலாமாண்டு நினைவஞ்சலி பேரணி நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது மாகாண தலைவர் கார்லோஸ் மசோன் பதவி விலககோரி முழக்கம் எழுப்பப்பட்டது.