ஒரே நாளில் 7200 லாரி ஓட்டுனர்கள் பணி நீக்கம்… அமெரிக்க ஆங்கிலத் தேர்வில் தோல்வி… இந்திய வம்சாவளி ஓட்டுநர்களின் கதி என்ன?

8 hours ago

அமெரிக்காவில் லாரி ஓட்டுநர்களுக்கு கட்டாயமாக விதிக்கப்பட்ட ஆங்கிலத் தேர்வில் தோல்வியடைந்ததால் 7,200-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி ஓட்டுநர்கள், குறிப்பாக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களைச் சேர்ந்த சீக்கியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சீன் டபி அறிவித்தபடி, இந்த ஆண்டு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாரி தொழிலில் 1,30,000 முதல் 1,50,000 வரை இந்திய வம்சாவளி ஓட்டுநர்கள் பணியாற்றுகின்றனர்;

அவர்களில் 90% பேர் டிரைவர்கள் என நார்த் அமெரிக்கன் பஞ்சாபி டிரக்கர்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள், கலிஃபோர்னியா மற்றும் ஃப்ளோரிடாவில் இந்திய வம்சாவளி ஓட்டுநர்கள் ஏற்படுத்திய கொடூர விபத்துகளுக்குப் பிறகு அமல்படுத்தப்பட்டன.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு லாரி ஓட்டுநர்களை தேர்ந்தெடுக்கும் நெட்வொர்க்குகள் மூலம் பலர் வந்துள்ளனர்; ஆனால் ஆங்கிலத் தேர்வில் தோல்வி அவர்களின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. டிரம்ப் ஆட்சியின் இடைக்கால விதிகள் மேலும் ஆயிரக்கணக்கான இம்மிக்ரன்ட் ஓட்டுநர்களின் அனுமதியை ரத்து செய்யலாம் என சீக்கிய அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த லாரி தொழில், பஞ்சாபி சமூகத்திற்கு நிதி மேலாண்மையை அளித்து வந்தது; இப்போது இது பெரும் சவாலாக மாறியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ், கலிஃபோர்னியா போன்ற மாநிலங்களில் இந்தியர்கள் பெருமளவில் டிரைவர்களாக உள்ளனர்.

Babblumagesh30

செய்யாத கொலைக்கு 43 ஆண்டுகள் சிறை..! 1000 குற்றவாளிகள் தப்பலாம்; நிரபராதி தண்டிக்கக் கூடாது! – சுப்ரமணியம் வேதத்திற்கு நேர்ந்த கொடுமை..!

1,000 குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது நீதி நெறியின் அடிப்படை. ஆனால், அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்ரமணியம் வேதம் என்பவர் செய்யாத கொலைக் குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார். இத்தனை ஆண்டுகால சட்டப்…

Read more

19 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தவித்த தம்பதி…. AI மூலம் கருவுற்ற பெண்…. அதிர்ச்சி சம்பவம்…!!

அரியவகை விந்தணுக்களைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன், 19 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் தவித்த தம்பதியினர் கருத்தரித்துள்ளனர். இந்தச் சாதனை லான்செட் ஆய்விதழில் வெளியாகி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 39 வயது ஆணுக்கும், 37 வயதுப்…

Read more