அமெரிக்காவில் ஆங்கில புலமை இல்லை என்று கூறி, 7 ஆயிரம் லாரி ஓட்டுநர்களை நீக்கி அந்நாட்டுப் போக்குவரத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் விபத்துகள் அதிகரிப்பதாகக் கூறி, ஆங்கிலத்தில் பேசுவது, படிப்பதை அமெரிக்க அரசின் போக்குவரத்துத் துறைக் கட்டாயமாக்கியது.
அமெரிக்காவில் லாரி ஓட்டுநர்களாக, இந்தியர்கள், குறிப்பாகச் சீக்கியர்களே அதிகளவில் பணியாற்றுகின்றனர். அங்கு, ஒன்றரை லட்சம் சீக்கியர் லாரி ஓட்டுகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாத நிலவரப்படி, டிரம்ப் உத்தரவிட்டபடி ஆங்கில புலமைத் தேர்வில் தேர்ச்சி பெறாத 7 ஆயிரத்து 248 லாரி ஓட்டுநர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக அமெரிக்கப் போக்குவரத்து அமைச்சர் சீன் டபி தெரிவித்துள்ளார்.











