வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் (Lasantha Wickramasekara) கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, இன்று (26.10.2025) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (Cid) கெகிராவ பிரதேசத்தில் வைத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட தேடுதல் நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், நேற்று (25.10.2025) தென் மாகாணம் முழுவதும் காவல்துறையினர் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.











