அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வானில் வெடித்து சிதறிய விமானம்

8 hours ago

அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானமே விபத்தி சிக்கியுள்ளது.

இந்தநிலையில், மெக்டொனல் டக்ளஸ் MD-11 ரகத்தைச் சேர்ந்த UPS 2976 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இயந்திர கோளாறு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், புறப்பட்ட உடனேயே விமானத்தில் இயந்திர கோளாறு அல்லது தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வானில் வெடித்து சிதறிய விமானம் | Ups Cargo Plane Crashes In Kentucky 3 Dead

சரக்கு விமானமான இதில் மூன்று விமானப் பணியாளர்கள் மட்டுமே இருந்ததாக UPS உறுதி செய்துள்ளது.

விமானம் தரையில் விழுந்தபோது பெரும் தீ விபத்து ஏற்பட்டதுள்ளதுடன் தீ ஒரு மைல் தூரத்திற்குப் பரவியுள்ளது.

போக்குவரத்து 

விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், 11 பேர் காயமடைந்துள்ளதாக கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வானில் வெடித்து சிதறிய விமானம் | Ups Cargo Plane Crashes In Kentucky 3 Dead

விபத்து நடந்த லூயிஸ்வில் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய, தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் கியவை இணைந்து தீவிர விசாரணையைத் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!