விண்வெளி தலைவனின் அடுத்த அதிரடி: உலகம் காணாத ‘டெமோ’… எலான் மஸ்க் அறிமுகப்படுத்தும் மர்ம வாகனம்…!!

2 days ago

SpaceX தலைவர் எலான் மஸ்க் ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள், ‘பறக்கும் கார்’ (Flying Car) ஒன்றின் செயல்திறன் விளக்கம் (Demo) செய்து காட்டப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தச் செயல் விளக்கம், தொழில்நுட்ப வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மைல்கல்லாக அமையும் என்று அவர் உறுதியாக நம்புவதாகக் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு உலகளவில் வாகனத் துறையிலும், தொழில்நுட்ப உலகிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இது உண்மையில் நாம் நினைப்பது போன்ற பறக்கும் கார்தானா, அல்லது வேறு ஏதேனும் அதிநவீன தொழில்நுட்பமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறி சஸ்பென்ஸ் வைத்துள்ளார் எலான் மஸ்க். அவர் கூறுவது முற்றிலும் புதிய வடிவிலான போக்குவரத்துத் தீர்வாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மஸ்க்-ன் இந்த அறிவிப்பு, எதிர்காலத்தில் போக்குவரத்து முறையை அடியோடு மாற்றியமைக்கும் ஒரு தொடக்கமாக அமையலாம் என ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

news-admin

அதிரடித் தாக்குதல்: ஓடும் ரயிலில் 10 பேருக்கு கத்திக்குத்து… பிரிட்டனில் நடந்தது என்ன…?

பிரிட்டனின் கேம்பிரிட்ஜுக்கு அருகே உள்ள ஹூண்டிங்டன் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் மீது சரமாரியாகக் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரமான தாக்குதலில் பலத்த காயமடைந்த 10 பேர்…

Read more

வளர்ப்புத் தந்தையின் மிருகத்தனமான குற்றத்திற்கு உச்சகட்ட தண்டனை! 104 ஆண்டுகள் சிறைவாசம்! தீர்ப்பு எதிரொலியால் மலேசியாவில் பெரும் பரபரப்பு!

மலேசியாவில், தனது இரண்டு வளர்ப்பு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த 35 வயது நபருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 104 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 18 பிரம்படிகளும் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 15 மற்றும் 16 வயதுடைய இளம்பெண்கள் ஆவர்.…

Read more