வடக்கு உட்பட பல இடங்களில் இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு எச்சரிக்கை

8 hours ago

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (05) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பலத்த காற்று 

மேற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மக்களுக்கு எச்சரிக்கை | Thunderstorm Warning For Sri Lanka Today

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!