லூவர் அருங்காட்சியக கொள்ளை! மேலும் ஐவர் அதிரடி கைது

6 days ago

பிரான்சின் உலகப்புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த 19 ஆம் திகதி நடந்த திகிலான கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில்; நேற்றிரவு பரிஸ் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மேலும் ஐந்துபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலில் கைதான இரண்டு பேர் தற்போதுவரை 96 மணி காவலில் வைத்து விசாரிக்கபட்டுவரும் நிலையில் பிரான்சின் ஆராய்ச்சி மற்றும் தலையீட்டுப் படையணியும் கொள்ளைகளைத்தடுக்கும் படையணியும் துரிதமாக இயங்கி இந்தப் புதிய கைதுகளை மேற்கொண்டுள்ளது.


குற்றவாளிகள்

நேற்றிரவு 8 மணியளவில், பரிசின் 16வது வட்டாரத்திலும், சென்ற் டெனிஸ் பகுதியிலும் கைது செய்யப்பட்ட இவர்கள் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

லூவர் அருங்காட்சியக கொள்ளை! மேலும் ஐவர் அதிரடி கைது | Louvre Jewellery Heist Five More Arrested

Image Credit: Reuters

நேற்றிரவு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரும், கொள்ளை நடந்த இடத்தில் குற்றவாளிகள் விட்டுச் சென்ற பொருட்களில் கண்டுபிடிக்கப்பட்ட டிஎன்ஏ எனப்படும் மரபணு தடயவியலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

கொள்ளைபோன கிரிடங்கள் மற்றும் நகைகள்

கடந்த சனிக்கிழமை, கைதுசெய்யப்பட்ட 34 மற்றும் 39 வயதுடைய இரண்டு ஆண்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, அவர்கள் இருவரும் அருங்காட்சியத்தை கொள்ளையிட்டமை தொடர்பான குற்றங்களை ஓரளவு ஒப்புக்கொண்டதாக நேற்று அறிவிக்கபட்ட நிலையில் இந்த புதிய கைதுகள் இடம்பெற்றுள்ளன.

லூவர் அருங்காட்சியக கொள்ளை! மேலும் ஐவர் அதிரடி கைது | Louvre Jewellery Heist Five More Arrested

 Image Credit: The New York Times

எவ்வாறாயினும், இதுவரை கொள்ளைபோன 88 மில்லியன் யூரோ மதிப்பபுள்ள கிரிடங்கள் மற்றும் நகைகளை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், அவை விரைவில் கண்டுபிடிக்கப்படும் என புலனாய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!