அணு ஆயுத சோதனைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்குமாரு அதிகாரிகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
சுமார் 30 ஆண்டுகளாக நிறுத்திவைத்திருந்த அணு ஆயுத சோதனைகளை மீண்டும் நடத்துமாறு தனது பாதுகாப்புத் துறைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
இதன் எதிரொலியாக விளாடிமிர் புடின், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆயுத சோதனை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த புடின், “நிறுத்திவைக்கப்பட்ட அணு ஆயுத சோதனைகளை மறுபடியும் நடத்தும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை.

இருப்பினும், அமெரிக்கா அத்தகைய சோதனையில் ஈடுபட்டால் ரஷ்யாவும் அந்த நடவடிக்கையில் இறங்கும்.
செயல்திட்டங்கள்
டொனால்ட் ட்ரம்ப்பின் அண்மைக்கால உத்தரவையடுத்து, அந்த நாடு மீண்டும் அணு ஆயுத வெடிப்பு சோதனைகளை நடத்தவிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள உளவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அத்தோடு, அணு ஆயுத சோதனைகளை மீண்டும் நடத்துவதற்கு ஆயத்தமாகும் வகையில் அதற்கான செயல்திட்டங்களை உருவாக்கி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.











