ரஷ்யாவில் அடுத்தடுத்து பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்

1 day ago

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று (03) மதியம் 12.40 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 52.41 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 159.93 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

மீண்டும் நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நேற்று மதியம் 2.14 மணியளவில் அப்பகுதியில் ரிக்டர் 6.1 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யாவில் அடுத்தடுத்து பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் | Two Powerful Earthquakes In Russia

ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதனால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!