யாழ்ப்பாணத்தில் (Jaffna) வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு பேரை கைது செய்து, காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணை
அதன் போது குறித்த ஆறு பேரில் ஒருவர் யாழ்ப்பாண நகர் பகுதியில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதனை கண்டறிந்த காவல்துறையினர் குறித்த நபரிடம் அது தொடர்பில் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளின் போது கொள்ளையடிக்கப்பட்ட சங்கிலி, மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள் என்பவற்றை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!











