யாழில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு

1 day ago

யாழ்ப்பாணம் - சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

யாழ். உடுவில் பகுதியில் நேற்றையதினம் (03) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடுவில் - மல்வம் பகுதியைச் சேர்ந்த 46 வயதான தவராசா ஜெயசுதன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

மேலதிக விசாரணை

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் இதற்கு முன்னரும் ஒருதடவை உயிர்மாய்க்க முற்பட்டதாக அறியமுடிகிறது.

யாழில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு | Family Man Died After Making Wrong Decision Jaffna

இந்தநிலையில் நேற்றையதினம் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!