மொராக்கோவில் அரசுக்கு எதிராக Gen Z இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் தற்போது வழக்கு பாய்ந்துள்ளது.
வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய நிறுவனங்கள், போதுமான நிதி வழங்கப்படாததால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசு நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் ஆட்சியாளர்களின் ஊழலை எதிர்த்து, மொராக்கோவின் முக்கிய நகரங்களில் ஜென் – ஸி என்றழைக்கப்படும் இளம்தலைமுறையினர் கடந்த ஒரு மாதமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஜென் – ஸி போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்த நிலையில், நாடு முழுவதும் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 ஆயிரத்து 400 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. அதில் 1,473 பேர் நீதிமன்ற விசாரணை எதிர்பார்த்து சிறையில் உள்ளனர்.
இதற்கிடையே மொராக்கோ அரசு Gen Z தலைமுறையினரிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வதாக மனித உரிமை குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன.











