மேல் மாகாணத்தின் முக்கிய பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல்: தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்பு!

1 week ago

மேல் மாகாணத்தின் முக்கிய பிரமுகர்கள் உட்பட 25 பேருக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, காவல்துறை மா அதிபரின் அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காவல்துறை மா அதிபரின் குறித்த அறிக்கையை தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காவல்துறை மா அதிபரின் அறிக்கை

இந்தநிலையில், அவர்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்காக இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்பு! | Death Threats Against 25 In Western Province

இதேவேளை, குறித்த 25 பேரினுள் பெரும்பாலானவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தொடர்புபட்ட அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர அடையாளம் தெரியாத நபர்ககளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் அவர் உயிரிழப்பதற்கு முன்னர் தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக காவல்துறையில் முறைப்பாடு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.