அனுமதிப்பத்திரம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகள் தர்மபுரம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து, கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்திற்கு இன்று (04.11.2025) காவல்துறையினரால் மீட்கப்பட்டன.
தர்மபுர காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவை மீட்கப்பட்டன.
சந்தேகநபர்கள் கைது
முதிரை மரக்குற்றிகளை காவல்துறையினர் மீட்டதுடன், அவற்றை எடுத்துச் செல்லப் பயன்படுத்திய வாகனங்களுடன் மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.

வாகனம் மற்றும் சந்தேகநபர்களை நாளைய தினம் (05.11.2025) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
















