முடங்கும் வைத்தியசாலைகள்..! வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ள வைத்தியர்கள்

1 week ago

Ministry of Health Sri Lanka GMOA Sri Lanka National Health Service Doctors

By Thulsi Oct 30, 2025 05:20 AM GMT

Thulsi

நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளார்.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

தன்னிச்சையான இடமாற்றம்

தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாளை (31) போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  

முடங்கும் வைத்தியசாலைகள்..! வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ள வைத்தியர்கள் | Doctors To Launch Island Wide Strike On Friday

இந்த இடமாற்ற முறைமை இன்று (30) நடைமுறைப்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் ஏற்படக்கூடிய சேவை முடக்கத்திற்கான முழுப் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ReeCha