மாவீரர் நாள் அனுஷ்டிப்பு விவகாரம் - சிறீதரன் எம்.பியின் சாரதிக்கு பிணை

1 day ago

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் (S.Sritharan) சாரதியும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமாகிய பாரதிதாசன் எழில்வேந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

கடந்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் வார நிகழ்வுகளின் போது மாவீரர்களின் திருவுருவப்படங்களை பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட காவல் துறையினரால் தாக்கல் செய்யப்பட்டு, பாரதிதாசன் எழில்வேந்தன் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அச்சுறுத்தல்

மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும்  சூழலில், ஏறக்குறைய பன்னிரண்டு மாதங்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட மாவீரர்களின் படங்களினை காரணம் காட்டி, இரண்டு நாட்களுக்கு முன் வழக்குத்தாக்கல் செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நடவடிக்கையானது, மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவீரர் நாள் அனுஷ்டிப்பு விவகாரம் - சிறீதரன் எம்.பியின் சாரதிக்கு பிணை | Sridharan Mps Driver Suddenly Arrested

இத்தகைய நடவடிக்கையானது கடந்த கால அரசாங்கங்கள் போலவே தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய நிகழ்வுகளை அச்சுறுத்தும் வகையில் மேற்கொண்டு வருகின்றதாக பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர் .

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!