மலையக தொழிற்சங்கங்களும் சௌமியமூர்த்தி தொண்டமானும் : மருதன் ராம்

3 hours ago

மலையக பெருந்தோட்ட மக்களின் உரி மைகள் மற்றும் அவர்களின் சமூக முன்னேற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தும் போது அதில் மலையக மக்களுக்கான தொழிற்சங்கங்கள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும். இலங்கை யின் ஏனைய சமூகங்களைப் போன்று அரசியல் பிரதிநிதித்துவம் மாத்திரம் இன்றி மலையக மக்களுக்காக குரல் எழுப்ப வேண்டிய முக்கிய பொறுப்பு பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கு காணப்படுகின்றது.

மலையக தொழிற்சங்கங்களின் முதன்மை யான பொறுப்பு, தோட்டத் தொழிலாளர்க ளின் உரிமைகளைப் பாதுகாப்பது, அவர்களின் நலன்களை மேம்படுத்துவது மற்றும் நியாய மான ஊதியம், பணிச்சூழல், மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் போராடு வதாகும். அத்துடன், தொழிற்சங்கங்கள் அரசி யல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதற்கும், நடைமுறைப்படுத்துவதற் கும் பங்களிப்பு செய்கின்றன.

இவ்வாறு மக்களுக்காக உருவாக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் தொடக்கத்தில் தற்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்று கூறப்படும் தொழிற்சங்கத்தின் நிறுவனர் சௌ மியமூர்த்தி தொண்டமான் முக்கிய இடம் வகிக் கின்றார். இலங்கைக் தொழிலாளர் காங்கிர ஸின் நிறுவுனர் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 21ஆவது சிரார்த்ததினம் கடந்த 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்  1930களில் தமது அரசியல் பயணத்தை ஆரம் பித்திருந்தார்.

1930களின் ஆரம்ப காலப்பகுதியில் அட்டன் நகரில் காந்தி சேவா சங்கம் இயங்கி வந்தது. அந்த சங்கத்தின் ஊடாக அவரின் அரசி யல் பயணம் ஆரம்பமாகியது. ஜவஹர்லால் நேருவின் கருத்துக்கேற்ப ஜூலை 24, 1939இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை – இந்திய காங்கிரசின் கம்பளைக் கிளையின் தலைவராக, ஆகஸ்ட் 13 1939இல் சௌமியமூர்த்தி தொண்டமான் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

இலங்கையில் 1930களின் கடைசி பகுதி யில் ஏற்பட்ட இந்திய எதிர்ப்பு அலைகள் காரண மாக அதிகளவான தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை இந்திய காங்கிரசில் இணைந்தனர். இதனால் அவர்களது பிரச்சினைகளை பேச வேண்டிய தேவை இலங்கை இந்திய காங்கிரசுக்கு ஏற்பட்டது.

ஆனால் இலங்கை இந்திய காங்கிரஸ் இந்திய தொழிலாளரது பிரச்சினைகளை தோட்ட நிர்வாகத்திடம் கொண்டு சென்ற போது அவர்கள் அரசியல் கட்சியுடன் பேச மறுத்தனர். மாறாக தொழிற்சங்கத்துடன் மட்டுமே பேச முடியுமென வாதிட்டனர். இதனால் 1940ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்சங்க கிளை ஆம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப தலை வராக சௌமியமூர்த்தி தொண்டமானும் அப்துல் அசீசும் தெரிவுசெய்யப்பட்டனர். 1940 செப்டம்பர் 7 – 8இல் இலங்கை இந்திய காங்கிர சின் தொடக்க விழாவை தலைமை தாங்கி சௌமியமூர்த்தி தொண்டமான் நடத்தினார். இந்நிகழ்வே இவரது வாழ்வின் முதலாவது பிரதான அரசியல் நிகழ்வாகும்.

1945ஆம் ஆண்டு நுவரெலியா பொதுக் குழுவில் இலங்கை இந்திய காங்கிரசினதும் அதன் தொழிற்சங்கத்தினதும் தலைவராக தெரிந் தெடுக்கப்பட்டார். 1947இல் 95பாராளு மன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கை இந்திய காங்கிரஸ் எட்டு ஆசனங்

களுக்கு போட்டியிட்டு ஏழு இடங்களை கைப்பற்றியது.

சௌமியமூர்த்தி தொண்டமான்  நுவரெலியா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இதற்குப் பின்னர் இலங்கை சுதந்திரம் பெற்றதுடன் இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தின் பிரதமரான டி.எஸ்.சேன நாயக்க இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் போது இலங்கை வந்து குடியேறிய இந்திய பாகிஸ்தானிய மக்களது குடியுரிமையை பறிக்கும் சட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றினார். சௌமியமூர்த்தி தொண்டமான்  இதற்கு எதிராக பாராளுமன்றில் வாதப்பிரதிவாதங்களை செய்தும் பலனற்றுப் போனது. குடியுரிமையைப் பறித்த பின்னர் டி. எஸ். சேனநாயக்க இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்-1949 என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தார். இதன்படி இலங்கை குடியுரிமையை பெற பல தகைமைகள் முன்மொழியப்பட்டிருந்தது. இது சரியான சட்டமாக தெரிந்தாலும் பல நடைமுறைச் சிக்கல்களை கொண்டிந்தது. இதனால் அச்சிக்கல்களைச் சுட்டிக்காட்டி சௌமியமூர்த்தி தொண்டமான்  இதனைப் பாராளுமன்றில் எதிர்த்தார்.

இலங்கை இந்திய காங்கிரசின் மத்தியக் குழு யாரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க

கூடாது என தீர்மானித்தது. இதன் படி பெரும்பான்மையான இந்தியர்கள் விண் ணப்பிக்க வில்லை. டி. எஸ். சேனநாயக்கவின் மரணத்துக்கு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட் டது. இதன்போது இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக இருந்தபடியால் சௌமியமூர்த்தி தொண்டமானும் ஏனைய ஆறு பிரதிநிகளும் மீண்டும் பாராளுமன்றம் செல்ல முடியவில்லை.

ஏப்ரல் 28, 1952இல் இலங்கை வாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு பேரணி யொன்றையும் சத்தியாக்கிரகம் ஒன்றையும் நடத்த ஆரம்பித்தார். ஏப்ரல் 29, 1952இல் அசீசுடன் கூடச் சென்று பிரதமரின் அலுவலக அறைக்கு முன்னதாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் நிலவியதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. பாராளுமன்றம் முன்பாக வும் தமது போராட்டத்தை அவர் தொடர்ந் தார். இப்போராட்டங்கள் காரணமாக அரசு இந்தியர்களை மீண்டும் குடியுரிமைக்கு விண்ணப் பிக்க கோரியது. இதன்போது 850,000 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர். பல போராட்டங்களின் பின்னர் மலையக மக்களுக்கு குடியுரி மையை பெற்றுத்தந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்  மீண்டும் 1977ஆம் ஆண்டு பாராளுமன்ற தெரிவானதுடன், 1999ஆம் ஆண்டு ஆண்டு இறக்கும் வரை அவர் ஆளும் அரசாங்கங்களில் முக்கிய அமைச்சுப் பதவிகளை யும் வகித்திருந்தார்.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் தூரநோக்கு கருத்துக்களில் ஒன்று “எமது வருங்காலச் சந்ததியினர் சமாதானமாகவும் சகோதரத்துடனும் வாழ வழிவகுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியுடன் ஆளும் கட்சியின ரும் இந்நாட்டு மக்களும் நடந்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின் றேன். இந்த இலக்கை எய்தும் நோக்குடன் நாம் அனை வரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டும். இது தான் சுமுக உறவுமுறைக்கான ஒரே வழி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலுக்காக பிளவுகள்பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களுக்கான முக்கிய தொழிற் சங்கங்களில் ஒன்றாக மாறியதுடன் அரசியல் ரீதியாகவும் தமது இருப்பை நிலைநாட்டியது. எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பலர் விலகிச் சென்றதுடன் பல புதிய தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் மலையகத்தில் தோற்றம் பெற்றன. மலையகப் பெருந்தோட்ட மக்களுக்காக தோற்றம் பெற்ற இவ்வாறான தொழிற்சங்கங்கள் தங்களின் அரசியல் இருப்பை உறுதி செய்வதற்காக தற் போது பிளவுபட்டு காணப்படுகின்றன.

பல சந்தர்ப்பங்களில் வாய்மொழி மூலமாக மலை யக மக்களுக்கான பிரச்சினைகளின் போது ‘நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும்’ என்று கூறப்பட்டாலும் பல சந்தர்ப்பங்களில் அதற்கு மாறான சம்பவங்களே நிகழ்ந்துள்ளன. மலையக மக்களுக்காக பல தொழிற்சங்கங்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றில் சில தொழிற்சங்கங்கள் அரசியல் அந்தஸ்தையும் பெற்றுள்ளன.

இவ்வாறு அரசியல் அந்தஸ்தை பெற் றுள்ள தொழிற்சங்கங்கள் மலையக மக்களுக் கான வேதனம், காணியுரிமை, வீட்டுவசதி உள்ளிட்ட அடிப்படை விடயங்களுக்காக தற்போது பிளவுபட்டு போராடுகின்றன. சில சந்தர்ப்பங்களில் தங்களின் அரசியல் சுயலாபத்துக் காகவும் இவ்வாறான போராட்டங்கள் முன் னெடுக்கப்படுகின்றன. இது தொழிற்சங்கங்களின் பலவீனமான நிலை மற்றும் மலையக மக்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.  தொழிற்சங்க தலைவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமையின்மை மலையக மக்களின் உரிமைகளைப் பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்துகின்றன. சில தொழிற்சங் கங்கள், குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே விமர்சனங்களை முன்வைத்துவிட்டு, பின்னர் தேர்தல் காலங்களில் ஆளும் வர்க்கத்தை ஆதரிக் கும் போக்கைக் கொண்டிருப்பதாக விமர்சிக்கப் படுகின்றன.

சில அரச சார்பற்ற நிறுவனங்களின் மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் மலையக மக் களை ஒன்றிணைய விடாமல் தடுக்கின்றன என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. “மலையக மக்களுக்காக” என்ற நோக்குடன் தொழிற்சங்கங் கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் தற்போது அவை பிளவுபட்டு இருப்பதனால் அதன் தாக்கம் மலையக பெருந்தோட்ட மக்களையே சென்றடைகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் அவருக்கு பின்னால் பலர் இணைந்து மலை

யக மக்களுக்காக குரல் கொடுத்த போதிலும் அண்மைய போக்குகள் முரணாகவே காணப்

படுகின்றன. மலையக மக்களுக்காக உருவாக்கப்படுகின்ற தொழிற்சங்கங்கள் தங்களுக்

குள் காணப்படும் பிளவுகளை விடுத்து ஒன்றி ணைவதே மக்களின் உரிமையை உறுதி செய் வதற்கான வழியாகும்.