
கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியில், மெக்ஸிகோவில் அமைந்துள்ள நேஷனல் பேலஸ் அருகே உள்ள தெருவில் தன் ஆதரவாளர்களுடன் அதிபர் கிளாடியா உரையாற்றிக்கொண்டிருந்தார்.
அப்போது, அவரின் பின்னால் இருந்த நபர் ஒருவர் கிளாடியாவின் கழுத்தின் மீது முத்தமிட முயன்றதையும் அவரை தொடுவதையும் வீடியோவில் காண முடிகிறது.
உடனடியாக கிளாடியா விலகிக்கொண்டார். இதையடுத்து, அந்நபர் கைது செய்யப்பட்டார்.
“தன் மீது அத்துமீறலில் ஈடுபட்ட நபர் மீது வழக்கு தொடுப்பேன் என, மெக்ஸிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் தெரிவித்துள்ளார். நான் வழக்குப் பதியவில்லையென்றால், மெக்ஸிகோவின் மற்ற பெண்களுக்கு என்ன நடக்கும்? ஒரு அதிபருக்கு இதனை செய்ய முடியுமென்றால், நம் நாட்டின் அனைத்து பெண்களுக்கும் என்ன நடக்கும்?” என புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கிளாடியா கேள்வி எழுப்பியுள்ளார்.
“இதுகுறித்து நான் வழக்கு தொடுக்க உள்ளேன்,” எனக்கூறிய அவர், “முன்பு நான் மாணவியாக இருந்தபோதும் இதை நான் அனுபவித்துள்ளேன்” என்றார்.











