மறுபிறவி எடுத்தேனும் பழி தீர்ப்பேன்.....! நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்

1 day ago

டுத்த பிறவி எடுத்தாவது நிச்சயம் பழி தீர்ப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க (Chamara Sampath Dassanayake) தெரிவித்துள்ளார்.

நுகேகொடை (Nugegoda) போராட்டத்தில் பங்கேற்பதில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு விடுத்துள்ள நிலையிலேயெ சாமர எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.   

அரசியல் பேதங்களை மறந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் நுகேகொடையில் அணிதிரள வேண்டும் என சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

பழி வாங்க முற்படக்கூடும்

நுகேகொடை போராட்டமானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரானது. அதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும்.

மறுபிறவி எடுத்தேனும் பழி தீர்ப்பேன்.....! நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் | Will Take Revenge Chamara Sampath Dassanayake

2029 ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து இந்த போராட்டத்தை தவறவிடக்கூடாது.

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டமானது அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்குரிய நடவடிக்கை அல்ல.  இந்த அரசாங்கத்துக்கு எதிராக கட்டாயம் எதிர்ப்பை வெளியிட வேண்டும்.

சிலவேளை என்னை பழிவாங்க முற்படக்கூடும். ஆவியாக வர முடியாவிட்டால் அடுத்த பிறவி எடுத்தாவது நிச்சயம் பழி தீர்ப்பேன் எனவும் சாமர சம்பத் தஸநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!