மடக்குளியில் சடலங்கள் மீட்பு!

6 days ago

கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மட்டக்குளி, காக்கைத் தீவு கடற்கரையிலும், களனி ஆற்று முகத்துவாரத்திற்கு அருகிலும் இந்த இரண்டு அடையாளம் தெரியாத சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இறந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு, தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. 

மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.

Related