போலி NVQ சான்றிதழால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: சிக்கிய நிறுவனம்

1 day ago

போலி NVQ சான்றிதழ் வழங்கிய நிறுவனமொன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வீட்டுப் பணிப் பெண்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு தேவையான NVQ சான்றிதழ்களைப் போலியாக வழங்கிய நிறுவனமொன்றே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மாவனெல்லையில் இயங்கி வந்த நிறுவனமொன்றிற்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பயிற்சிகளை நடத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குகின்றது.

 சிக்கிய நிறுவனம் | Nvq Certificate For Foreign Maids Scandal

இந்த நிறுவனங்கள் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். இந்தநிலையில் குறித்த நிறுவனம் முதலில் கண்டியில் ஆரம்பிக்கப்பட்டு, பயிற்சிகளை வழங்கியுள்ளது.

இருப்பினும், அவர்கள் தொடர்புடைய நிபந்தனைகளை மீறி தனிநபர்களுக்கு போலி சான்றிதழ்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.

நடத்தப்பட்ட விசாரணை

இதற்கிடையில், இந்த ஆண்டு பெப்ரவரி ஐந்து முதல் மாவனெல்ல பகுதியிலும் பயிற்சி படிப்புகளைத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், மாவனெல்ல கிளைக்கு மூன்றாம் நிலை கல்வி ஆணைக்குழு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

 சிக்கிய நிறுவனம் | Nvq Certificate For Foreign Maids Scandal

நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த நிறுவனத்தை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பணியகத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவால் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!