போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான நாடு தழுவிய நடவடிக்கையின் கீழ் நேற்று (03) 1,200க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட 1,273 சோதனைகளில் மொத்தம் 1,264 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஒருவருக்கு எதிராகத் தொடங்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் 32 பேருக்கு எதிராக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மேலதிக நடவடிக்கையின் போது அடையாளம் காணப்பட்ட எட்டு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய சோதனைகளின் போது, 1 கிலோகிராம் 227 கிராம் படிக மெத்தம்பேட்டமைன் (‘ஐஸ்’) மற்றும் 909 கிராம் 82 மில்லிகிராம் ஹெராயின் உள்ளிட்ட பிற போதைப்பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.











