புகையிரத பயணிகளுக்கு சிரமங்களை கொடுத்தவர்களுக்கு 14ஆயிரம் ரூபாய் அபராதம்

22 hours ago

ரயில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு வர்த்தகமும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ரயிலில் வர்த்தகம் செய்வதற்கு ரயில்வே பொது முகாமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் நீதிபதி வலியுறுத்தினார்.

ரயில் பயணிகளை துன்புறுத்தும் வகையில் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 11 சந்தேக நபர்களுக்கு எதிராக இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட 11 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​நீதவான் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 07 நபர்களுக்கு தலாவ 2,000 ரூபா வீதம் ‍மொத்தம் 14,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. அதேநேரம், 4 சந்தேக நபர்களுக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.