பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய குர்ரம் மாவட்ட சுல்தானி பகுதியில், ராணுவ வாகனமொன்று சென்று கொண்டிருந்தபோது தெஹ்ரீக்-இ-தலீபான் (TTP) பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து சக்திவாய்ந்த IED வெடிகுண்டு வெடிப்பில் கேப்டன் நோமான் உள்பட ஆறு ராணுவ வீரர்கள் பலியாகினர், 14 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல் ஆப்கானிஸ்தானுடனான மோதல் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த சில நாட்களுக்குப் பிறகு நடந்தது, இது பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பு சவால்களை மீண்டும் வெளிப்படுத்துகிறது.
தாக்குதலுக்கு பின்னால், ராணுவ வீரர்கள் தொடர்ந்து நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ஏழு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்தப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த வீரர்கள், மீதமுள்ள தீவிரவாதிகளைத் தேடி அகற்றும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இம்மாதத் தொடக்கத்தில், அதே எல்லைப் பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 9 துணை ராணுவ வீரர்களும் 2 அதிகாரிகளும் உயிரிழந்தனர்.
TTP போன்ற குழுக்கள் இத்தகைய தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருவதால், பாகிஸ்தானின் வடக்கு-மேற்கு எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
Babblumagesh30
“ஆட்டோமெட்டிக் வேலை அனுமதி நீட்டிப்பு நிறுத்தம்..!”… அமெரிக்காவின் அதிரடி முடிவு… இந்தியர்கள் பெரும் பாதிப்பு..!!!
அமெரிக்காவில் வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை (EAD) தானாக நீட்டிக்கும் வசதியை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) திடீரென நிறுத்தியுள்ளது. அக்டோபர் 30, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு புதுப்பிப்புக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு இனி தானியங்கி நீட்டிப்பு வழங்கப்படாது…
அடக்கொடுமையே..! குளியலறையில் 4 முறை நடந்த பிரசவம்… குழந்தைகளை கொன்று அலமாரியில் மறைத்த தாய்… வெளியான பரபரப்பு பின்னணி…!!!!
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில், 39 வயது ஜெசிகா மௌத் என்ற பெண், ஆறு ஆண்டுகளுக்குள் நான்கு குழந்தைகளை தனது குளியலறையில் பிரசவித்து, அவற்றை கொன்று, உடல்களை அலமாரி மற்றும் கூரைக்கூடில் மறைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வீட்டு உரிமையாளர்…











