பறிபோகவுள்ள ரணிலின் தலைமை பதவி: டயனா வகுக்கும் திட்டம்!

6 days ago

ஐக்கிய தேசியக் கட்சியில் இளைஞர்களை இணைத்து, அவர்களுக்கு தலைமைப் பதவிகளை வழங்குமாறு தான் ஒரு ஆலோசகராக தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றைப் பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்தமை மற்றும் சரியான விசாவின்றி இலங்கையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்டு வழக்கு இன்று (30.10.2025.) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிமன்றத்திற்கு வருகை தந்தவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரணிலை விட்டு விடுங்கள்

கடவுச்சீட்டு வழக்கு மேலும் கருத்து தெரிவித்த டயானா கமகே, “வழக்கு தொடர்பில் நான் எதுவும் கதைக்க விரும்பவில்லை அது பிரச்சினைக்குரியதாகும்.

 டயனா வகுக்கும் திட்டம்! | Diana Plan Against Ranil

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அமைதியாக இருக்க விடுங்கள். அவர் தற்போது ஒரு நோயாளி. ஐக்கிய தேசியக் கட்சியில் இளைஞர், யுவதிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் கட்சியை ஒப்படைத்து விடுங்கள்.

எதிர்க்கட்சி என்றால் அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும் தான்.

எனினும், நாடாளுமன்றத்தில் தனிப்பட்டவர்களின் அழகு மற்றும் அவர்களின் உள்ளக பிரச்சினைகள் தான் அதிகளவில் பேசப்படுகிறது. இதற்காகவா நாடாளுமன்றத்திற்கு இலட்சக் கணக்கில் செலவழிக்கப்படுகிறது.” எனவும் தெரிவித்துள்ளார்.