இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வதையே முழுநேர வேலையாகக் கொண்ட கூட்டம் தற்போது பெருகி வருகிறது. இதில் ஆண்களுடன் பெண்களும் தற்போது இணைந்துள்ளனர். அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்மணி, முழு மாத கர்ப்பிணியாக (9 மாத கர்ப்பிணி) இருந்துகொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் காட்சி காண்போரை பதற வைத்துள்ளது. அந்த வீடியோவில், முழு கர்ப்பிணியாக இருக்கும் அந்தப் பெண்மணி, தனது இருசக்கர வாகனத்தில் இரண்டு கைகளையும் மேல்நோக்கி நீட்டி, ஹேண்டில்பாரைப் பிடிக்காமல், வாகனத்தின் இருக்கையில் ஏறி நின்று பயணம் செய்கிறார்.
இந்த ஆபத்தான காட்சிகளைப் பார்த்த நெட்டிசனன்கள், அவரைப் பாராட்டிய அதே வேளையில் கடுமையாக விமர்சனமும் செய்துள்ளனர். “நீங்கள் சாகசம் செய்வதில் திறமைசாலிதான், அதற்காகப் பாராட்டுகள். ஆனால், இந்தக் கர்ப்பிணி நிலையில் இது உங்களுடைய குழந்தையை ஆபத்தில் தவிக்கவிடும் செயல். தயவுசெய்து இதுபோன்ற ஆபத்தான செயல்களில் இனி ஈடுபடாதீர்கள்” என்று பலரும் கவலையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு தாயாக, பொறுப்பற்ற வகையில் உயிரை பணயம் வைக்கும் இவரது செயல் குறித்து இணையத்தில் பெரும் விவாதம் எழுந்துள்ளதுடன், இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
news-admin
1500 கோடிக்கு அதிபதி…. 86 வயதிலும் Uber ஒட்டி…. இந்த முதியவர் என்ன செய்கிறார் தெரியுமா….? அசர வைக்கும் உண்மை….!!
பிஜி நாட்டில் உபர் ஓட்டுநராக இருந்த 86 வயது முதியவரை சந்தித்தார் இந்திய தொழிலதிபர் நவ் ஷா. பயணத்தின்போது பேச்சுக்கொடுத்து, “பில்கள் எப்படி கட்டுகிறீர்கள்?” என்று கேட்டார். “நான் தொழிலதிபர், என் நிறுவனம் ஆண்டுக்கு 175 மில்லியன் டாலர் வியாபாரம் செய்கிறது”…
“ஜெய் ஸ்ரீ ராம்!”…. பாகிஸ்தானிய மக்களிடையே முழக்கமிட்ட ரஷ்ய இளைஞர்… மக்கள் செய்த ஆச்சரியமான செயல்… வைரலாகும் வீடியோ..!!!
பாகிஸ்தானின் பரபரப்பான தெருக்களில் ரஷ்ய இளைஞர் ஒருவர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கத்தியபோது, அங்கு கூடிய மக்கள் விரோதமாக எதிர்க்காமல், சிரித்துக்கொண்டே அந்த ஜெபத்தைப் பாடத் தொடங்கியது அதிர்ச்சி தரும் வைரல் வீடியோவாக மாறியுள்ளது. இந்த வீடியோவில், உள்ளூர் உடையை…











