கனடாவின் டொரொண்டோ நகரிலுள்ள டிம் ஹார்டன்ஸ் காபி கடையில், மது போதையில் ஒருவர் இந்திய நபரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, குடியேற்ற மக்களிடம் அதிகரித்து வரும் இனவெறி குறித்து கவலை எழுந்துள்ளது.
A shocking video has surfaced showing a drunk Canadian man attacking an Indian man simply because he believes the Indian is acting superior. Until Indians abroad stand up to bullies like this, they will be run over again and again and remain easy targets. Don’t let fear silence… pic.twitter.com/JwtZ0ghYrh
— Meru (@MeruOnX) November 3, 2025
வீடியோவில், டொரொண்டோ ப்ளூ ஜெய்ஸ் ஜாக்கெட் அணிந்திருந்த கனடிய நபர், “நீ என்னை விட மேலாக நடந்து கொள்கிறாய்” என்று கூறி, இந்திய நபருடன் தகராறில் ஈடுபட்டார். கோபத்தின் உச்சியில் அவர் தன் கைப்பேசியை எறிந்து, பின்னர் அந்த இந்திய நபரிடம் தள்ளுமுள்ளு செய்தார். பணியாளர் ஒருவர் இடையீடு செய்து இருவரையும் அமைதிப்படுத்த முயன்றபோதும், மது போதையில் இருந்த நபர் தொடர்ந்து ஆவேசமாக நடந்துகொண்டார்.
இந்தச் சம்பவம், அண்மையில் எட்மன்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் அர்வி சிங் சாகு தாக்கப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து நடந்துள்ளது. கார் மீது சிறுநீர் கழித்த நபரை எதிர்கொண்டபோது, அவர் தாக்கியதில் சாகு மயக்கமடைந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அந்த தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட கைல் பாப்பின் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக எட்மன்டன் போலீசார் தெரிவித்தனர்.
Muthu Kumar
‘சல்யூட் மேடம்’ உலகக் கோப்பையை வென்ற கையோடு… DSP ஆனார் தீப்தி ஷர்மா! உ.பி. அரசின் அதிரடி முடிவு..!!
உலகக் கோப்பையை வெல்லக் காரணமான இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மாவுக்கு உத்தரப் பிரதேச காவல் துறையில் DSP (துணை கண்காணிப்பாளர்) பதவி வழங்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 50 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, கோப்பையை வெல்வதில் தீப்தி…
புனிதமான இடத்தில் இப்படியா பண்ணுவீங்க?…. பெண்ணை இழுத்து தள்ளிய போலீஸார்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
உம்ரா வழிபாட்டின் போது மக்கா புனித பள்ளிவாசல் அருகே சவூதி போலீஸார் ஒரு பெண்ணையும் எகிப்து நாட்டு யாத்திரிகரையும் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, உலகம் முழுவதும் முஸ்லிம் சமூகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Viral video…











