நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே, நிதி முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் சரித ரத்வத்தே ஒரு சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றினார்.
2015 ஆம் ஆண்டில் நிலையான கொள்முதல் நடைமுறைகளை மீறி 50 தற்காலிக கிடங்குகளை வாங்கியது தொடர்பான விசாரணை தொடர்பாக இந்த கைது நடந்துள்ளது.
இந்த தற்காலிக கிடங்கு இலங்கை அரசு வர்த்தக கூட்டுத்தாபனத்தின் மூலம் ரூ.90 மில்லியனுக்கும் அதிகமான செலவில் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.











