தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது..! மனோ எம்பி வெளியிட்ட அறிவிப்பு

1 day ago

தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நவம்பர் 21 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சி பேரணியில் தனது கட்சி பங்கேற்காது என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில காரணங்களால் தமிழ் முற்போக்கு கூட்டணிபேரணியில் பங்கேற்காது என்று காரணத்தை வெளியிடமாமல் கூறியுள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முடிவு குறித்து தனக்கு உறுதியாக தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாமலுடான பிரச்சினை 

மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடனான பிரச்சினைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்ற கருத்தை மறுத்த மனோ கணேசன், எந்த அரசியல்வாதிகளுடனும் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது..! மனோ எம்பி வெளியிட்ட அறிவிப்பு | Tpa To Not Attend Nov 21 Joint Opposition Rally

அதன்போது, அந்த இடத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவை கண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கணேசன், தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும் அநுரவும் தனது நெருங்கிய நண்பர் என்றும் அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!