பாகிஸ்தானில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தகர்க்கப்பட்ட பயங்கரவாத முகாமில் பாகிஸ்தான் அமைச்சர் நூன் பார்வையிட்டுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் கடந்த மே மாதம் இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம் தகர்க்கப்பட்டது.
இதில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் ஒன்பது பயங்கரவாத முகாம்களில் முசாபராபாத் தளமும் ஒன்று. இந்தத் தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்துப் பாகிஸ்தான் அரசாங்கம் இறந்தவர்களுக்கு இழப்பீடு அறிவித்ததுடன், உள்கட்டமைப்பை மீட்டெடுப்பதாக உறுதியளித்தது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பயங்கரவாத முகாமிற்குப் பாகிஸ்தான் மத்திய அமைச்சர் நூன் முதன்முறையாகச் சென்றுள்ளார்.
அங்கு இந்தியாவின் தாக்குதலால் சேதமடைந்த பகுதிகளை அமைச்சர் நூன் பார்வையிட்டு மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.











