வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடைய என கூறப்படும் சர்ச்சையான குரல் பதிவொன்று வெளியாகி பாரிய அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
குறித்த குரல் பதிவில், செல்வம் அடைக்கலநாதனுடன் பேசும் நபர் பெரும் அச்சத்துடன் பதிலளிப்பதை அறியமுடிகிறது.
இந்த நிலையில், அவ்வாறு அச்சத்துடன் உரையாடிய நபர் கடந்த மாதம் நீர்கொழும்பில் வைத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இந்த விடயம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கையில், கனடாவில் வசிக்கும் ஒருவர் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி செல்வம் அடைக்கலநாதன் எம்.பி யாழ்ப்பாண காவல்நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
அடைக்கலநாதனின் வாகனமும் வவுனியா பகுதியில் வைத்து திடீரெ தீப்படித்து எரிந்த நிலையில், யாழ்ப்பாண காவல்நிலையத்தில் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தொடர்புடைய சம்பவம் வடக்கில் பெரும் சர்ச்சையான வாதங்களை கிளப்பியுள்ள பின்னணியில், இது தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் செய்தி வீச்சு...











