செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் வெடித்த போராட்டம்

6 days ago

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் யாழில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் செம்மணி பகுதியில் இன்றையதினம் (30) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு உண்மையான நீதி கிடைக்கப்பெற்று மக்களின் கண்ணீருக்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலர் தூவி அஞ்சலி

செம்மணி புதைகுழி அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்துமயானத்தின் வாயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது பேரணியாக செம்மணிச் சந்திவரை சென்றது.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் வெடித்த போராட்டம் | Protest In Jaffna Justice For Chemmani Mass Grave

பின்னர் உயிர்நீத்த உறவுகளின் அஞ்சலிக்காக செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு தூபியடியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் பேராயர்கள், கிறிஸ்தவ மத குருக்கள், அருட்சகோதரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGallery