கூட்டு எதிரணியின் வெற்றிக்காக பிரார்த்திக்கும் அரசாங்க அமைச்சர்

6 days ago

கூட்டு எதிரணியினரின் நுகேகொடைக் கூட்டம் வெற்றியளிக்கவேண்டும் எனப் பிராத்திக்கிறேன் என காணி விவசாய, கமநல சேவைகள் அமைச்சர் கே.டி.லால்காந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனெனில், பொதுமக்களுக்கு பயனற்ற ஒன்றாக அது உள்ளது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

 கண்டியில் நடைபெற்ற ஒரு வைபவத்தையடுத்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

 போதைப்பொருள் வர்த்தகம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூட்டு எதிரணியின் வெற்றிக்காக பிரார்த்திக்கும் அரசாங்க அமைச்சர் | Lalkantha Prays Victory Of The Joint Opposition

“மேற்படி கூட்டத்தை நடத்துவதால் பாதாள உலகக் குழுக்களோ அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தையோ தடுக்க முடியாது.

எனவே அது பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் ஒரு விடயமாக இருக்காது. அது சவால்கள் நிறைந்தது.

எனவே பொதுமக்களுக்கு பலனளிக்காத ஒரு விடயத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள். பொதுமக்களது ஆதரவு இல்லாத மேற்படி விடயத்தால் எதுவித நன்மையும் ஏற்படப் போவதில்லை” என்றும் கூறியுள்ளார்.