கணேமுல்ல சஞ்சீவ கொலையில் சிக்கிய பெண் சட்டத்தரணியின் அதிர்ச்சிகர பின்னணி

6 days ago

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 55 வயதுடைய பெண் சட்டத்தரணி குறித்த பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபரான குறித்த சட்டத்தரணி, சட்ட நடவடிக்கைகளில் மற்ற உயர் குற்றவாளிகளுக்காகவும் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நதுன் சிந்தக என்ற பிரபல பாதாள உலக குற்றவாளியான ஹரக் கட்டா, மடகாஸ்கரில் கைது செய்யப்பட்டபோது, அவரின் சார்பாகவும் இந்த சட்டத்தரணி நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது.


குற்றவியல் நபர்களுடனான தொடர்பு

அத்தோடு, எல்லை மீறல்களுக்காக இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபருக்காகவும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தியிருப்பதை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் சிக்கிய பெண் சட்டத்தரணியின் அதிர்ச்சிகர பின்னணி | Sanjeeva Murder Background Of The Arrested Lawyer

இதன்படி, சந்தேகநபரான பெண்ணின் சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு குற்றவியல் நபர்களின் குற்றச் செயல்களுக்கு உதவியிருப்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதோடு, அவரது நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொருப பின்னணியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேகநபரான சட்டத்தரணி கடவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலக குற்றவாளியான கெஹெல்பத்த பத்மெ மற்றும் இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அடிப்படையில் குறித்த பெண் சட்டத்தரணி இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சஞ்சீவ கொலைக்கான உதவி

இந்த நிலையில், கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிக்கு உதவ எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பல சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் சிக்கிய பெண் சட்டத்தரணியின் அதிர்ச்சிகர பின்னணி | Sanjeeva Murder Background Of The Arrested Lawyer

அதன்போது, துப்பாக்கிதாரி நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய உதவ சட்டத்தரணிகள் அணியும் இரண்டு கழுத்துப்பட்டிகளை வழங்குதல் இவர் வழங்கியுள்ளமை கண்டுபிடிக்கபட்டுள்ளது.

இதேவேளை, துப்பாக்கியை மறைக்க இரண்டு சட்ட குறிப்பு புத்தகங்களை சந்தேகநபர் வழங்கியுள்ளதும் கண்டறிப்பட்டுள்ளது.

மேலும், அங்கீகரிக்கப்படாத அணுகலை எளிதாக்க ஒரு போலி சட்டத்தரணி அடையாள அட்டை மற்றும் சட்ட வல்லுநர்களின் கார்களில் பொதுவாகக் காட்டப்படும் வாகன அனுமதிச் சீட்டையும் அவர் வழங்கியிருப்பதையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!