உக்ரைனில் உறுதியாக முன்னேறும் ரஷ்ய படைகள் : பறிபோகும் முக்கிய நிலப்பரப்புகள்

18 hours ago

உக்ரைனில் ரஷ்ய படையினா் கடந்த ஒக்டோபா் மாதம் உறுதியான முன்னேற்றத்தைக் கண்டதாக அமெரிக்காவின் போா் ஆய்வு அமைப்பு (ISW) தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் தெற்குப் பகுதியில் கடந்த ஒக்டோபா் மாதம் ரஷ்ய இராணுவம் தனது முழு கவனத்தை செலுத்தி தாக்குதல் நடத்தியதால் அந்த மாதம் அது உக்ரைனில் ஸ்திரமான முன்னேற்றத்தைக் கண்டது.

உறுதியான முன்னேற்றம்

நான்கு ஆண்டுகளுக்கும் மேலான போரில் மிகத் தீவிரமான சண்டை நடந்த பிராந்தியம் அது. இந்த பிராந்தியத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த போக்ரோவ்ஸ்க் நகரைத் தக்கவைக்க உக்ரைன் போராடி வரும் நிலையில், அங்கு ரஷ்யா ஸ்திரமாக முன்னேறிவருவது குறிப்பிடத்தக்கது.

 பறிபோகும் முக்கிய நிலப்பரப்புகள் | Russias Steady Advance In Ukraine

கடந்த ஓகஸ்டில் உக்ரைனிடமிருந்து ரஷ்யா 461 சதுர கி.மீ. நிலப்பகுதியைக் கைப்பற்றியது. இந்த வேகம் நடப்பு 2025-ஆம் ஆண்டின் சராசரி மாதாந்திர முன்னேற்றத்துடன் ஒத்துப்போகிறது.

கைப்பற்றப்பட்ட உக்ரைன் நிலப்பரப்பு

அதிகபட்சமாக ரஷ்ய இராணுவம் ஜூலையில் 634 சதுர கி.மீ. உக்ரைன் நிலப்பரப்பை கைப்பற்றியது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பறிபோகும் முக்கிய நிலப்பரப்புகள் | Russias Steady Advance In Ukraine

தற்போது டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் 81 சதவீத பகுதியை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்தமாக, உக்ரைனின் 19.2 சதவீத நிலப்பரப்பை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது. இதில் 2014-ல் இணைத்துக்கொள்ளப்பட்ட கிரிமியா தீபகற்பமும் அடங்கும்.      

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!