“இது இந்தியா அல்ல ஆஸ்திரேலியா”… நீங்க தீபாவளி கொண்டாடனும்னு நாங்க மாற முடியுமா…? கிறிஸ்துமஸ்க்கு கூட இப்படி இல்ல… ஆஸி. பெண்ணின் பதிவு வைரல்..!!!

1 week ago

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டம் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. நிறம் நிறைந்த தீபங்களால் அலங்கரிக்கப்பட்ட நிரிம்பா ஃபீல்ட்ஸ் பகுதியின் வீடியோ ஒன்று  பரவியதன் மூலம் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் உருவாகியுள்ளது.

இந்த வீடியோவை சமூக வலைத்தளமான எக்ஸில் பகிர்ந்துள்ளார் கோபி தச்சர் என்ற பெண்மணி. அவர் தனது பதிவில், “இந்த வீடுகள் கிறிஸ்துமஸ் தினத்தில் தீபங்களால் அலங்கரிக்கப்படவில்லை. ஆனால் தீபாவளி அன்று அலங்கரிக்கப்படுகிறது. இது பபாரம்பரியத்திற்கு அபாயம்” எனக் கூறியுள்ளார். அதோடு ஆஸ்திரேலியாவில் உள்ள சில இந்துக்கள் இப்போது தீபாவளியை அதிகாரப்பூர்வ பொது விடுமுறையாக மாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றனர். இல்லை. இது ஆஸ்திரேலியா, இந்தியா அல்ல. நீங்கள் வெளியேறத் தேர்ந்தெடுத்த நாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் எங்கள் நாட்டை நாங்கள் மாற்ற மாட்டோம் என்றும் பதிவிட்டுள்ளார்.

Sydney, Australia 🇦🇺

These houses are not lit up for Christmas.

They are lit up for Diwali.

Just about everyone in this neighbourhood of Nirimba Fields is Indian.

The West has reached a pivotal moment—we must preserve our own culture before we lose it. pic.twitter.com/3aunZCfDCb

— Kobie Thatcher (@KobieThatcher) October 23, 2025

இந்தக் கருத்துக்கு பின்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் வாழும் பெரும்பாலான இடங்களில், இந்த கருத்து உண்மையிலேயே பாரம்பரியத்தை காப்பாற்றுவதை மட்டுமே குறிக்கிறது என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் சில இந்துக்கள், தீபாவளியை அதிகாரபூர்வ பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் எனும் கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். “நமது பாரம்பரியத்தை காப்பாற்றும் முயற்சியில் நாமே மாற்றம் செய்யப் போகவில்லை” எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

Some Hindus in Australia are now calling for Diwali to become an official public holiday.

No.

This is Australia, not India.

We will not change our country to mirror the one you chose to leave.

— Kobie Thatcher (@KobieThatcher) October 23, 2025

மேலும் இந்தப் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வெப்பமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரின் கருத்துப்படி, “ஆஸ்திரேலியாவை தங்கள் வீடாக மாற்றிக் கொள்வதில் இந்தியர்கள் பணிபுரிந்து, வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ளும் போது, தங்களுடைய பாரம்பரியத்தையும் காப்பாற்றுகிறார்கள்” என்பது எடுத்துக்காட்டு என கூறப்பட்டுள்ளது. மற்றொரு பின்தொடர்பாளர், “இந்தியர்கள் அனைவரும் தங்களுடைய எல்லா திருவிழாக்களையும் கொண்டாடுகின்றனர்” என்று குறிப்பிட்டார்.

Siva Kumari

சிங்கப்பூர் வாலிபரிடம் அத்துமீறிய இந்திய பெண்…. 2 சவுக்கு அடி + …. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

சிங்கப்பூரின் ராஃபிள்ஸ் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த இந்திய நாட்டவரான எலிப் சிவா நாகு (34), ஆண் பார்வையாளர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இந்தக் குற்றத்திற்காக அவருக்கு ஒரு வருடம் இரண்டு மாத சிறைத்தண்டனையும், இரண்டு பிரம்படிகளும்…

Read more

60 வயசுல வாழ்க்கையே போச்சு…. இனி உண்மை தெரிஞ்சா என்ன..? தெரியலனா என்ன…? சினிமாவை மிஞ்சும் உண்மை சம்பவம்…!!

ஜப்பானில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் மனித வாழ்வின் விதியும் விஞ்ஞானத்தின் வலிமையும் ஒன்றாக இணைந்த சுவாரஸ்யமான சம்பவமாக அமைந்துள்ளது. டோக்கியோவில் 1953 ஆம் ஆண்டு San-ikukai மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைகள் தவறாக மாற்றப்பட்டதால், ஒரு குழந்தை பணக்கார குடும்பத்தில்…

Read more