அமெரிக்காவின் கென்டக்கி மாநிலம், ஹாப்கின்ஸ்வில்லில் வசிக்கும் ஒரு பெண், ஆன்லைனில் ஆர்டர் செய்த அவசர மருந்துகளை எதிர்பார்த்து தனது வீட்டிற்கு வந்த பேக்கேஜை திறந்தபோது அதிர்ச்சியடைந்தார். புதன்கிழமை இரவு வந்த அந்தப் பெட்டியில் மருந்துகள் இல்லாமல், குளிரூட்டப்பட்ட பேக்கில் மனித கைகள் மற்றும் விரல்கள் இருந்தன.
இது அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் செய்தியாகத் தெரிவித்துள்ளது. பெண் உடனடியாக 911 ஈமர்ஜென்ஸி எண்ணை அழைத்து, “நாங்கள் நேஷ்வில்லில் இருந்து வந்த அவசர மருந்துகளை எதிர்பார்த்தோம். இரண்டு பெட்டிகள் வந்தன.
ஒன்றைத் திறந்ததும், இது மனித உடல் பாகங்கள் என்பதாகத் தெரிந்தது. இது மருத்துவ ரீதியானது என்றாலும், நமக்குச் சொந்தமில்லாத உடல் பாகங்களை வைத்திருக்க விரும்பவில்லை” என்று கூறினார். கிறிஸ்டியன் கவுன்டி கரோனர் ஸ்காட் டேனியல் சம்பவ இடத்திற்குச் சென்று உடல் பாகங்களைப் பெற்றுக்கொண்டார்.
அந்தப் பேக்கேஜ், நேஷ்வில்லில் உள்ள ஒரு மருத்துவ பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட வேண்டியது, ஆனால் டெலிவரி தவறால் தவறுதலாக இந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்தது. ஏர்லைன், ஃப்ரெயிட் கம்பெனி மற்றும் கூரியர் சர்வீஸ் ஆகியவற்றின் தவறால் இந்தச் சம்பவம் நடந்ததாக டேனியல் தெரிவித்தார்.
நான்கு வெவ்வேறு டோனர்களிடமிருந்து வந்த அந்த உடல் பாகங்கள், கேடவர் (உடல் தானம் செய்தவர்கள்) மூலம் பெறப்பட்டவை என்று அவர் கூறினார். அடுத்த நாள் காலை, உள்ளூர் மார்க்கில் இருந்து கொரியர் பெற்றுக்கொண்டு சரியான இடத்திற்கு அனுப்பினார். பெண்ணைப் பாராட்டிய டேனியல், “அவர் அதிகாரிகளை அழைத்தது சரியான செயல்” என்றார். இதன் மூலம் அவர் சரியான மருந்து பெட்டியையும் பின்னர் பெற்றுக்கொண்டார்.
Babblumagesh30
பெட்ரோல்… டீசல் வண்டிக்கு குட் பை…? 300 kW வேகத்தில் சார்ஜ்… 9,000 கி.மீ. நெடுஞ்சாலைக்கு பிரான்ஸ் போட்ட மெகா பிளான்…!
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில், உலகின் முதலாவது “சுய சார்ஜிங்” (Wireless Charging) மின்சார நெடுஞ்சாலை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சாதனையை அந்நாட்டின் அறிவியல் உலகம் பெருமையுடன் கொண்டாடுகிறது. 1.5 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ள இந்தச் சாலையில், பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருக்கும்…
‘மறந்துட்டேன் சார் ப்ளீஸ்… “அமெரிக்க ஸ்டோரில் தற்செயலாக திருடிய இந்தியப் பெண் மன்னிப்புக் கேட்டுக் கண்ணீர்” வைரலாகும் வீடியோ…!!
அமெரிக்காவில் உள்ள ஒரு கடையில், ஒரு இந்தியப் பெண்மணி தற்செயலாகப் பொருள் திருட்டு (Accidental Shoplifting) செயலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான ஒரு உணர்ச்சிப்பூர்வமான வீடியோ, சமீபத்தில் இணையத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், அந்தப் பெண்மணி கடை…











