2026 வரவு செலவு திட்டத்தில் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை ரூ.1,500 ஆல் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் வரவுசெலவு திட்ட உரையை நிகழ்த்தும் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
தொலைதூரப் பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்படாத காரணத்தினால் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிபர்களுக்கான கொடுப்பனவு
இதேவேளை, கல்வி இலக்குகளை அடைவதில் அதிபர்களின் நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் பொறுப்புக்கூறலை அங்கீகரிக்கும் வகையில், அதிபர் பதவியில் பணியாற்றும் அதிபர்களுக்கான கொடுப்பனவையும் 1,500 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.












