அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்க முடியாது – கனடா பிரதமர்

1 day ago

அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்க முடியாது எனக் கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

வரி விதிப்பு விவகாரம் தொடர்பாகக் கனடா வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையான நிலையில், அந்நாட்டுடன் அனைத்து விதமான வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து பேசிய மார்க் கார்னி, கனடா உலகின் பிற நாடுகளுடனான புதிய உறவைக் கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளதாகவும், குறிப்பாக இந்தியாவுடனான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.