அமெரிக்காவை அச்சுறுத்தும் ரஷ்யா : அணுசக்தி நீா்முழ்கி ட்ரோன் வெற்றிகரமாக பரிசோதனை

6 days ago

அணுசக்தியைப் பயன்படுத்தி நீண்டதூரம் செல்லும் நீா்மூழ்கி ட்ரோனை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

கடந்த வாரம் அணுசக்தியில் இயங்கும், வரம்பில்லா தூரம் செல்லும் தனித்துவமான ‘புரேவெஸ்ட்னிக்’ ரக க்ரூஸ் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்த நிலையில் மேற்கண்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பு

இது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று புதன்கிழமை தெரிவிக்கையில்,

 அணுசக்தி நீா்முழ்கி ட்ரோன் வெற்றிகரமாக பரிசோதனை | Nuclear Powered Underwater Drone Russia Tests

மிகவும் சக்திவாய்ந்தது

அணுசக்தி மூலம், தானியங்கி முறையில் இயங்கும் ஆளில்லா நீா்மூழ்கி வாகனமான ‘பொசைடன்’ வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த நீா்மூழ்கி ட்ரோன், ரஷ்யாவின் மிகவும் மேம்பட்ட பொலிஸ்டிக் ஏவுகணையைவிட மிகவும் சக்திவாய்ந்தது.

 அணுசக்தி நீா்முழ்கி ட்ரோன் வெற்றிகரமாக பரிசோதனை | Nuclear Powered Underwater Drone Russia Tests

பெரிய நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட பொசைடன் நீா்முழ்கி ட்ரோனில், சாதாரண அணு உலையைப் போல் 100 மடங்கு சிறிய அணு சக்தி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்றாா்.

ரஷ்யாவின் இந்த அறிவிப்பு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யாவுடனான பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!