அமெரிக்காவின் மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை அதிபர் ஜேடி வான்ஸை இந்திய வம்சாவளி பெண் கேள்விகளால் துளைத்தெடுத்த சம்பவம் அந்நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அதிபர் ட்ரம்ப் நிர்வாகம், வேறு நாட்டவருக்குக் குடியுரிமை வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், அது தொடர்பான கேள்வி நேர நிகழ்ச்சி, மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கலந்து கொண்டு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது எழுந்து பேசிய இந்திய வம்சாவளி பெண் ஒருவர், எங்கள் இளமை முழுவதையும் இங்கே கழித்து, சொத்துகள் சேர்த்த பின்னர், திடீரென நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுவது எவ்விதத்தில் நியாயம் எனக் கேள்வி எழுப்பினார்.
அமெரிக்க குடியுரிமை கிடைத்துவிடும் என நாள் கணக்கில் எங்களை கனவு காண செய்தது நீங்கள்… ஆசை வார்த்தை கூறியது நீங்கள்.
ஆனால், இப்போது அமெரிக்கா உங்களுக்கானது அல்ல எனக் கூறுவது நியாயமா என இந்திய வம்சாவளி பெண் கேள்விகளால் துளைத்தெடுத்தார்.
இந்த கேள்வியைச் சிறுதும் எதிர்பார்க்காத ஜே.டி.வான்ஸ், நாங்கள் அப்படி ஒரு நெருக்கடியான சூழலை எல்லாம் உருவாக்கவில்லை என மழுப்பலாக பதலளித்தார். இந்தச் சம்பவம் அந்நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.











